Home இலங்கை “முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலம்” தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது’

“முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலம்” தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது’

by admin

யாழ். பல்கலைக்கழக நிலைகுறித்து விக்னேஸ்வரன் அறிக்கை
‘தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடையஅன்புக்குரியஉறவுகளைநினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது’ எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,யாழ். மாவட்டபாராளுமன்றஉறுப்பினருமானசி.வி.விக்னேஸ்வரன், ‘பல்கலைக்கழகப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும்’ எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.


யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போதுஉருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாககருத்துவெளியிட்டபோதே இவ்வாறுவிக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் இது குறித்துமேலும் தெரிவித்தவைவருமாறு,


‘இப்போது இடிக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டமாணவர்கள்,விரிவுரையாளர்கள்,ஊழியர்கள்,பல்கலைக்கழகசமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காகஅமைக்கப்பட்டது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகசமூகத்தினர் எனஅனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனைஅமைத்தார்கள். இதனைநிர்மூலமாக்கவேண்டும் என்றஅரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்துபல்கலைக்கழகநிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனைஅகற்றியிருக்கின்றது.


கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதானபடுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிடவேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒருஅங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தானவேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இது போன்றபலதிட்டங்கள் இந்தஅரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.


பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமதுஅன்புக்குரிய உறவுகளை நினைவு கூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியைஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பதுதமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிநசுக்குவதற்குஒப்பானது. இவ்வாறானசெயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிடமுடியாது. இது இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.


பல்கலைக்கழகம் அமைந்துள்ளபகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்துதுப்பாக்கி முனையில் மாணவர்களையும்,பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பதானது இராணுவஅடக்குமுறையின் அசிங்கமுகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்கவேண்டியஅவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்துதிரும்பப் பெறப்படவேண்டும். இப்பொழுது இங்குநடப்பதுவெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோஒருவிதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமதுசிங்கள சகோதரசகோதரிகள் உணர்வார்களாக!


அதேவேளை, இந்தநினைவுத் தூபி இடிப்புவிடயத்தில் பல்கலைக்கழகநிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒருஇழிவான செயலை செய்துவிட்டு அதனைமேலிடத்து உத்தரவு என்றுகாரணம் கூற முடியாது.

ஒரு தவறானகாரியத்தை செய்யுமாறு மேலிடத்து உத்தரவுவருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரியவைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்தவிடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எதுஎப்படி இருந்தாலும், இதுவரைகாலமும் இந்தநினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டுநிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுகருத்தில் கொள்ளப்படவேண்டும்.’
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்றஉறுப்பினர்
யாழ் மாவட்டம்

அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கிறது!மனோ!

அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என பலரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றஉறுப்பினரான மனோ கணேசனும் குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ருவிட் செய்துள்ளார்.

அவர், தனது ருவிட்டர் கண்டன பதிவில் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றி, போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை’ இடித்து தள்ளி இன்றைய இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது! மாவை சேனாதிராசா!

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது எனவும்,. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்

பெரும் எண்ணிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கி இந்த அருவருக்கத்தக்க, ஈனத்தனமான செயல் அரங்கேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை குறித்து அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ள மாவை சேனாதிராசா, உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதித்த மிலேச்சத்தனமான ஆட்சியின் நீட்சியே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் இதுகுறித்து அனைத்துகக் கட்சிகள், தரப்புக்களுடன் ஆராய்ந்து வலுவான நடவடிக்கையை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடிஅல்லர்
அடிபணிவதைவிடப் பதவிதுறப்பதேமேலானது – பொ. ஐங்கரநேசன் கண்டனம்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்தமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்குஅமைவாக,பல்கலைக்கழகநுழைவாசற் கதவுகளைப் பூட்டிவிளக்குகளைஅணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப்பல்கலைக்கழகநிர்வாகமேசெய்துமுடித்திருக்கிறது. இதற்கு,சட்டவிரோத தூபிஎன்பதால் அழுத்தங்கள் காரணமாகவேஅகற்றவேண்டிஏற்பட்டதுஎன்றுதுணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் அழித்துள்ளார். துணைவேந்தர் என்பவர்அரசின் அடிவருடிஅல்லர். அடிபணிந்துஒருஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவிதுறப்பதுமேலானதுஎன்றுதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனதுகடுமையானகண்டனத்தைவெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்தமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிநேற்றிரவு (08.01.2021) பல்கலைக்கழகநிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டதுதொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ளஊடகஅறிக்கையிலேயே இவ்வாறுதனதுகடுமையானகண்டனத்தைவெளிப்படுத்தியுள்ளார்.
அந்தஅறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்காலில் தமிழினஅழிப்பைநிகழ்த்திய ராஜபக்சசகோதரர்கள் அதற்கானசாட்சியங்களையும்,தடயங்களையும்அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன்செயற்பட்டுவருகின்றனர். அதன் ஒருகட்டமாகவேமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்கள்,ஊழியர்கள்,அவர்தம் உறவினர்கள் நினைவாகஅமைக்கப்பட்டநினைவுத்தூபியைத் தற்போதுபல்கலைக்கழகநிர்வாகத்தினரைக் கொண்டே இடித்தழிப்பித்துள்ளனர்.
நினைவுத்தூபிகள் பெறுமனேசீமேந்தாலும் கற்களாலும் ஆனஉயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும்பாறையாகக் கருதப்படுகின்றகருங்கல்தெய்வச்சிலையாகவடிக்கப்பட்டபின்னர் எவ்வாறுபுனிதம் பெற்றுவணக்கத்துக்குரியதாகமாறுகின்றதோஅதேபோன்றுதான் நினைவுக்கற்களும் நினைவுத்தூபிகளும். இவற்றில் மரணித்துப்போனவர்களின் ஆன்மாகுடிகொண்டிருப்பதாகவேஅவற்றைஅஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள்.
தமிழத்தேசியவிடுதலைப் போராட்டத்தில் காத்திரமானவரலாற்றுப் பங்களிப்பைநல்கிவந்தயாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,தற்போதுபல்கலைக்கழகநிர்வாகத்தினரின்இழிசெயலால் தன் மீதுகழுவமுடியாதகரியைப்பூசிக் கொண்டுள்ளது. அரசாங்கஅதிகாரிகள்,அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும்அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபேராசிரியர் அ. துரைராஜாஅவர்கள் ஒருதுணைவேந்தராகபல்கலைக்கழகத்தைநல்வழிநடத்திச் சென்றஅதேவேளை,தமிழ் இனத்தின் அரசியல் விடுதலைகுறித்ததெளிவானபார்வையுடனும்செயற்பட்டிருந்தார். அதனாலேயேஅவர் மாமனிதராகப்போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாகவேண்டாம்;குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச்சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கானஉத்தரவைச் சிரமேற்கொணடுநிறைவேற்றியிருக்கமாட்டார்கள்என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More