
அவர் கொன்றவர்க்கும்
இவர் கொன்றவர்க்கும்
அயலவர் கொன்றவர்க்கும்
இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும்
அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும்
தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும்
இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும்
நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் .
எங்கே என்றும் சொல்லி விடுகிறேன்
கடல் என்றால் அலையிலும்
கரை என்றால் நுரையிலும்
நிலம் என்றால் புழுதியிலும்
நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும்
வளி என்றால் அது வென்ற காற்றிலும்
ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும்
நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும்
எதுவுமே இல்லையென்றால்
துணை வேந்தரின் கவட்டிலும் கட்டுவேன்.
இடி.
பாவேல். தை 2021.
Spread the love
Add Comment