இலங்கை பிரதான செய்திகள்

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலையிலிருந்து மழையுடன் கூடியகால நிலை  தொடர்ந்து நிலவி வருகின்றது.

இந்நிலையில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் யாழ்.நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார்.

மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும். வட.பகுதியில் 100மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40- 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு கடல் தொழிலுக்குச் செல்வோர், தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் பிரதீபன் வலியுறுத்தியுள்ளார். #யாழ்_மாவட்டத்தில் #மில்லிமீற்றர் #மழைவீழ்ச்சி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.