Home இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் – நவீன் அதிர்ப்தி!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் – நவீன் அதிர்ப்தி!

by admin

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துள்ள, அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, இன்னும் 10 நாள்களில் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நேற்று முன்தினம் (13.01.21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், பதவிநிலைகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டன.

எனினும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் பங்கேற்கவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவிநிலைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், புதியவர்கள் பலர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். பழையவர்கள் சிலர்,ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். இந்நிலையிலேயே, நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில், பதில் பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த ஷமல் சேனாரத்ன, கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, டி.எம். சுவாமிநாதன் ஆகியோர், கட்சியின் சிரேஷ்ட உப-தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More