
கிளிநொச்சி, பூநகரி காவற்துறைப் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் இன்று (17.01.21) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெளிகரையில் அமைந்துள்ள பெண்ணின் வீட்டில் வைத்தே அவர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வயிற்றுப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காவற்துறையினர் தெரிவிள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Add Comment