இந்தியா பிரதான செய்திகள்

சரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நள்ளிரவு வேளையில் வந்த குறித்த லொறி எதிரே கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியதனையடுத்து கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தின் நடைபாதையில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது ஏறியது.

இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளனா். படுகாயம் அடைந்த 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பலியான 15 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் எனவும் கட்டிட வேலை செய்பவர்கள் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

வேலை முடிந்து சாலைஓரத்தில் தூங்கியபோதுதான் நள்ளிரவில் இந்த சம்பவம் நஇடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #குஜராத் #சரக்குலொறி #புலம்பெயர்_தொழிலாளர்கள் #பலி


Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link