இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை!

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ள சர்வ மத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைகளில் உள்ளஅரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வடக்கில் உள்ளசர்வமத தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேற்குறித்த விடயம் தொடர்பாகமதத் தலைவர்களின் கையெழுத்துஅடங்கியமகஜர் ஒன்றுஇன்றையதினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திகுரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்தமாதம் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பா கவடக்கில் உள்ள சர்வமதத்தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றையதினம் (18 மததலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இன்றையதினம் யாழ்.ஸ்ரீநாகவிகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதத்தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் தேரரிடம் வழங்கிவைத்தார்.

அவர்கள் அனுப்பியுள்ள மகஜரில்,
சிறிலங்காவில் பல்வேறு சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் படியாக வடக்கிலுள்ள மதத் தலைவர்களின் வேண்டுகோள்
மேதகு ஜனாதிபதி அவர்களே,
பல்வேறு (இந்துபௌத்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ) மதத் தலைவர்களாகிய நாங்கள் சிறைகளில் உள்ளஅனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கும்படி தங்களை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறோம்.


அரசியல் கைதிகளின் பெற்றோர், மனைவிமார் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீரோடு எங்களை அணுகி எப்படியாவது அவர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார்கள் அவர்களுடைய கண்ணீரும் மனமுடைந்த நிலையும் எமது உள்ளத்தை தொட்டுள்ளது இந்தக் கைதிகளில் சிலபேர் தங்களுடையவழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமலே 8 – 10 வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள.;
சிலபிள்ளைகள் பால.வயதுகளில் இருக்கும் பொழுதேஅவர்களுடையபெற்றோர் அவர்களது குடும்பங்களிலிருநது அகற்றப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தோடுதங்கள் குடும்பங்களை பராமரிக்க அவர்களுககு எந்தவழியும் இல்லை.

முன்னர் எப்போதையும் விடதற்போதுள்ள கொரானா கொள்ளை நோய் வேகமாகப் பரவும் சூழ்நிலையில் சிறைக் கொத்தணியில் 4000க்கு மேற்பட்டகைதிகளும், 16 அரசியல் கைதிகளும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். என்பதோடுஅவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயும் உள்ளம் உடைந்தும் இருக்கிறார்கள் குடிமக்களில் ஒருபகுதியினர் அவர்கள் எவ்வளவு சிறிய தொகுதியினராக இருந்தாலும் அவர்கள் கடுமுனைப்பான துன்பங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் உட்பட்டிருக்கும் பொழுது ஏனைய குடிமக்கள் அக்கறை கொள்ளாமல் இருக்கமுடியாது நீண்டகாலசிறைத் தண்டனை, ஆயுள் தண்டனைமற்றும் மரணதண்டனை பெற்றகைதிகள் கூட விடுவிக்கப்படுவதைநாம் ஒவ்வொருநாளும் கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். துர்பேறுவசமான அரசியல் கைதிகள் இதே நன்மைகளில் எதையும் அனுபவிக்கவில்லை என்பதை கவனிப்பதால் நாம் கவலையடைகிறோம்.
இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் சமூகத்துக்கு எந்தபாதிப்பையும் விளைவிக்க மாட்டார்கள் என்று நாம் மனப்பூர்வமாக நம்புகிறோம்.


பிரதான சமூக நீரோட்டத்துக்குள் தாங்கள் வருவது குறித்து அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதானது எமதுநாட்டின் சமாதான மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவும் எனநாம் உணர்கிறோம். மேதகு ஜனாதிபதியிடமிருந்து அனுகூலமான பதில்வினைகிடைக்கும் எனநாம் எதிர்பார்க்கிறோம் . தங்களையும் தங்கள் பணிகளையும் எமதுநாட்டையும் இறைவன் அசீர்வதிப்பாராகஎனகுறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                                                18.01.2021

His Excellency the President

Mr.GotabayaRajapaksa

Presidential Residence

Colombo

Request by the Religious heads in the North to give amnesty

to the Political Prisoners who are in the different jails in Sri Lanka

Your Excellency!

            We, on behalf of the different (Hindu, Buddhist, Muslim and Christian) heads make a sincere appeal to you to grant a General Amnesty and release all the political prisoners.

            The parents, wives, children and the near and dear ones have approached us with tears and requested us to somehow or other to get them released. We are deeply moved by their tears and depressed state.

Some of these prisoners are there for 8 to 10 years without their cases being taken up, while others are there for more the 10 to 15 years. Some children have their parents removed from their families when they were mere toddlers. They also have no means to support their families.

            More than ever before in the midst of the rapid spread of the Corona Virus pandemic and more than 4000 victims in the prisons cluster and 16 victims among the political prisoners they are dismayed and depressed.

            When one section of the population, however small it may be, is undergoing extreme hardship and depression the rest of the population cannot be indifferent.

            We hear everyday number of prisoners who are serving long sentences and even life-imprisonment and death sentences being released. We are saddened to note that these unfortunate political prisoners do not enjoy any of these benefits.

            We feel sincerely that these political prisoners once released will not be of any harm to the society. They will be grateful along with their families and get into the mainstream of the society. Amnesty to them we feel will help a great deal in the process of peace and reconciliation in our Country.

We look forward to a favourable response from your Excellency.

May God bless you, your work and our country.

We remain,

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.