Home இலங்கை அன்செல் தொழிலாளர்கள் சார்பாக சர்வதேச பிரச்சாரம் ஆரம்பம்

அன்செல் தொழிலாளர்கள் சார்பாக சர்வதேச பிரச்சாரம் ஆரம்பம்

by admin

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள, அன்செல் லங்கா நிறுவன நிர்வாகம், ஏழு வருடங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் ஜனவரி 21ஆம் திகதி ஒரு புதிய சர்வதேச ஒத்துழைப்பு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிலாளர்கள், தொழிற்சங்கம் ஒன்றில் உறுப்பினர்களாக இணைந்த குற்றத்திற்காக, வைத்திய மற்றும் தொழில்துறை கையுறைகளை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக  கருதப்படும் அவுஸ்திரேலிய பன்னாட்டு நிறுவனமான அன்செல் அவர்களை பணி நீக்கியிருந்தது.

அன்செல் தனது நிறுவனத்தில் வலுவான தொழிற்சங்கம் ஒன்று செயற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த செயற்பாட்டை கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியா-ஆசிய தொழிலாளர் இணைப்புகள் (Australia Asia Workers Links – AAWL) கடந்த 21ஆம் திகதி, அன்செல் ஊழியர்களுக்கு சர்வதேச ஆதரவைக் திரட்டும் முயற்சியின் ஒருகட்டமாக, ஏற்பாடு செய்த முதல் இணையவழி கூட்டத்தி ஆசிய பசுபிக் தொழிலாளர் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.

இலங்கை, மலேசியா, நேபாளம் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் கூட்டுறவு ஆர்வலர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  நிறுவனம் தனது உற்பத்தி இலக்குகளை அதிகரித்ததாக, 1991இல் நிறுவனத்தில் இணைந்து, 2013ஆம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்படும் வரை, 22 வருடங்கள் சேவையாற்றிய அன்செல் தொழிற்சங்கத்தின்  பிரதி செயலாளராக இருந்த தசந்த ஜெயலத் இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு பணிச்சுமையை அதிகரிக்கும் செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில், இதற்கு பதலளிக்கும் வகையில் நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட 10 பணி நீக்கம் செய்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை நிலைமைகள் மோசமடைதல் மற்றும் தொழிற்சங்க அடக்குமுறைக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையின் விளைவாக நிறுவனம் இறுதியில் சுமார் 300 தொழிலாளர்களை பணியில் இருந்து நிறுத்தியது.

சரியான ஊதியம் மற்றும் வேலை நிபந்தனைகளுக்காக  அன்செல் தொழிற்சாலை தொழிலாளர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டத்தை பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு ஊழியரான ஜனக இந்தக் கூட்டத்தில் விபரித்தார்.

1994இல் இந்த நிறுவனத்தில் இடம்பெற்ற ஒரு வேலைநிறுத்தத்தின் போது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் தனது சகாக்கள் 3 பேர் கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

எவ்வாறெனினுத், ஒக்டோபர் 13, 2013 அன்று நிர்வாகத்தால் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக,  நிறுவனத்தின் தொழிலாளர்கள் செய்த இந்த பெரும் தியாகங்களுக்கு மத்தியில், தொழிற்சங்க நடவடிக்கை சிறந்த ஊதியங்கள் மற்றும் சேவை நிலைமைகளுக்கு வழிவகுத்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க அமைப்பின் வலிமையை உடைப்பதே அன்செல் நிர்வாகத்தின் திட்டம்

இதேவேளை, இலங்கை சட்ட அமைப்பிக் ஊடாக சென்று ஊழியர் வெளியேற்றப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் முயற்சியானது நேரத்தை வீணடிக்கும் செயல் என ஜனக கூறியுள்ளார்.

“சர்வதேச ஒத்துழைப்புளால் மாத்திரமே எமக்கு உதவ முடியும்.”

அன்செல், இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாகவும், இந்த நாடுகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் அன்செல்லின் விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாகும் எனவும் சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய ஆராய்ச்சியாளர் அண்டி ஹால் கூறினார்.

இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் இல்லை. ஊழியர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டுமென்பதோடு,  மாதத்திற்கு 150 மணிநேர மேலதிக பணியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் மலேசிய தாதியர் சங்கத்தின் தலைவர் நூர்ஹயாதி, அவுஸ்திரேலிய தாதியர்கள் கூட்டமைப்பின் உதவி செயலாளர் மேடி ஹார்டன்ஸ், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயகோடி மற்றும் எழுந்து நிற்போம் (Stand Up Movement Lanka) அமைப்பின் ஆஷிலா தந்தெனிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கோரி மெல்போர்னில் அமைந்துள்ள அன்செல் லங்கா நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அவுஸ்திரேலியா-ஆசியா தொழிலாளர் இணைப்பின் தொழிற்சங்க பிரதிநிதிகள் சென்ற போதிலும்,  நிறுவன அதிகாரிகள் எவரும் அவர்களை சந்திக்கவில்லை.

“இலங்கை தொழிலாளர்கள் குழுவின் வாழ்க்கையின்  தீவிரமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்க நிறுவனத்தில் எவரும் இருக்கவில்லை” என அவுஸ்திரேலியா-ஆசியா தொழிலாளர் இணைப்பின் ஏற்பாட்டாளர் மன்ரிகோ மோட்டோ குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டியே அறிவித்த நிலையில் அவர்கள் வெளியேறினர்.

“இந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன, அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் அல்லது இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று அவுஸ்திரேலிய தொழிற்சங்க ஆர்வலர் விராஜ் திசானாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் நிறுவனத்தின் தொழிற்சங்க எதிர்ப்பு, மனிதவள அமைப்பு, மற்றும் அவர்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஏழு வருடங்களாக போராடி வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் எதிர்கால பணிகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறோம், மேலும் இந்த போராட்டத்தில் மேலும் தொழிற்சங்கங்கள் சேரும் என நம்புகிறேன். “

சர்வதேச இணைய மாநாட்டில், இலங்கையில் அன்செல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சர்வதேச செயற்பாட்டு தினத்தை நடத்த அஸ்திரேலிய-ஆசிய தொழிலாளர் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.  #அன்செல்_தொழிலாளர்கள் #சர்வதேச #பிரச்சாரம் #பணிநீக்கம் #தொழிற்சங்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More