இலங்கை பிரதான செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் வழக்கு -வரைபடத்தை சமா்ப்பிகுமாறு உத்தரவு

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் தொடர்பான சமாதான உடன்படிக்கையையும் கோவில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான வரைபடத்தையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளாா்.

குறித்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு கனிஷ்ட சட்டத்தரணிகள் மாத்திரம் மன்றில் முன்னியாகியிருந்த நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

கடந்த தவணை விசாரணையின் போது சர்ச்சையை ஏற்படுத்திய கோவில் விடயத்தை சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு வழியுண்டா என்பது தொடர்பிலும், தொல்பொருட்கள் இல்லாத பிரதேசம் எது என்பதனைக் கண்டுபிடித்து நீதிமன்றில் அறிக்கையிடுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த மாதம் நிலவிய தொடர் மழை காரணமாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியால் போனதாக அரச கனிஷ்ட சட்டத்தரணி இன்று மன்றுக்கு அறிவித்துள்ள நிலையிலேயே சமாதான உடன்படிக்கையையும் கோவில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான வரைபடத்தையும் அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தென்னைமரவாடி திரியாய் மக்களின் காணிக்குள் தொல்பொருட்கள் காணப்படுவதாகத் தொிவித்து நடவடிக்கை எடுத்தமை தொடா்பில் விதிக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவும் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.

திரியாய் பகுதியில் மக்கள் வசிப்பதற்கும் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளருக்கு முன் அறிவித்தல் வழங்கி தொல்பொருட்கள் காணப்படுகின்றதா என்பதை ஆராயுமாறும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. #கன்னியா_வெந்நீரூற்று #சமாதான_உடன்படிக்கை #இளஞ்செழியன் #திரியாய்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.