இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் தடைகளை கடந்து நடைபவனி தொடரும்!

அரசாங்கத்தின் தடைகளை கடந்து நடைபவனி தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகரில் சிவன் கோயில் முன்றலில் இன்று (05.02.21) காலை 8.30 மனி அளவில் தொடர்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணி நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர், இந்த அரசின் சிறுபான்மை மக்களுக்கான எதிரான நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், இந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி நடைபெறுகின்றது எனவும், அது சிங்கள மக்களுக்கு எதிரானதாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும், 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பவனி நடைபெறுவதாகவும் வடகிழக்கின் தெற்கு முனையில் இருந்து வடமுனையை நோக்கிய நிலையில் பயணம் தொடர்கின்றது. இந்த நடைபவனியை நிறுத்துவதற்கு அரசாங்கம் பலமுனைகளிலும் முயற்சித்தது எனினும் பொத்துவில் முதல் திருகோணமலை வரைக்கும் வரமுடிந்துள்ளது.

இந்நாட்டில் சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி சுதந்திரதின நிகழ்வில் பேசும் போது, நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார். எனினும் அது இங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆயினும் இந்நாட்டின் ஜனாதிபதி நான் சிங்கள மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது நாங்களும் வசிக்கின்றோம். அதோபோல் சிங்கள மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது. இதன் அடிப்படையில் நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்.

ஆயினும் இந்த நடைபவனி ஆரம்ப நாள் முதல் இதனை நிறுத்துவதற்கு பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவைபெற்று நடைபவனியை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆனால், இன்று காவற் துறையினரையும் போக்குவரத்து காவற் துறையினரையும் இந்த இடத்தில் நிறுத்தி வைத்து இப்போது எந்த எதிர்ப்புத் தன்மையையும் அவர்கள் காட்டவில்லை. எனக்கு எதிராகவும் சில பிரதேச நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறபட்டதாக அறிந்தேன். ஆனால் எனது கைகளில் ல் அது கிடைக்கப்பெறவில்லை. அரசாங்கம் எவ்வழிகளிலும் முயற்சித்தாலும் எனது நடைபவனி தொடரும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.