
இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சியை அமைக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் நேபாளத்தில் கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் கட்சியை ஆரம்பித்த பின்னர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், பாரதீய ஜனதா கட்சியை உலகளாவிய கட்சியாக மாற்றும் நோக்கத்தில் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment