
ஓராண்டுக்கும் மேலாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாத் தொற்றின் பரவல் தற்போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தொிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்றினால் உலகம் முழுவதையும் ஓராண்டுக்கு மேலாக உலகளவில் லட்சக்கணக்கான உயிாிழப்புகளும் கோடிக்கணக்கான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஓராண்டுக்கும் மேலாக பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்று தற்போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தொிவித்துள்ளது.
கடந்த வாரம் 27 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகி இருக்கும் நிலையில், இது முந்தைய வாரத்தை விட 16 சதவீதம் அதாவது சுமார் 5 லட்சம் குறைவாகும். அத்துடன் கடந்த வாரம் 81 ஆயிரம் உயிாிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5-ல் இரட்டை இலக்க சதவீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது எனவும் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் மட்டும் 7 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறதெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அனைத்து மண்டலங்களிலும் உயிரிழப்பு வீழ்ச்சியடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தொிவித்துள்ளது #உலகளவில் #கொரோனா #வீழ்ச்சி #WHO #உலகசுகாதாரஅமைப்பு
Add Comment