இலங்கை பிரதான செய்திகள்

தமிழுக்கு முன்னுரிமை அளித்தால் 50% கழிவு

வியாபார நிலையங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் ,  50% வியாபாரக்கழிவு வழங்கப்படும் என யாழ்.மாநகர சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற போது ,  புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்குவது தொடர்பில் முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.  அதனை சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #தமிழுக்கு #முன்னுரிமை #கழிவு #யாழ்_மாநகரசபை #முதல்வர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.