Home இலங்கை திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா!

திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா!

by admin


1950ம் ஆண்டு இந்தியாவில் மதுரையில் பொன்னுச்சாமிக்கும் இராமஇலட்சுமிக்கும் மூத்த மகளாக பிறந்தார் 1951ல் இலங்கை வந்து தனது தந்தையின் இடமான கீரிமலையில் வசித்தார். ஆரம்பகல்வியினை கீரிமலை நகுலேஸ்வரா பாடசாலையில் மேற்கொண்டார். அவரது தந்தையார் ஓர் ஆர்மோணிய கலைஞரும்இ ஒரு சிறந்த பாடகனாகவும் இருந்தார். அதே போல் தாயார் ஒரு சிறந்த பாடகியாகவும் நடிகையாகவும் விளங்கினார். இதனால் அவருக்கு இசைத்துறையில்நாட்டம் ஏற்பட்டது.
1962ல் தனது மாமாவான சங்கீத வித்துவான் வர்ணகுலசிங்கம் மற்;றும் மாவட்ட புரம் உருத்திராவதி ஆகியோரிடம் சங்கீதகலையை கற்றுவந்தார். இதன்போது தாயாருடன் இணைந்து பல இசை கச்சேரிகளையும் புராண நாடகங்களில் நாரதர் இ கிறிஸ்ணர், புலேந்திரன், லோகிதாசன் ஆகிய பாத்திரங்களை ஏற்று நடித்து அண்ணாவியார் கிறிஸ்ணாழ்வார், கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோரால் பாராட்டப்பட்டார்.


1964ல் உடுவில் இசைப்புலவர் சண்முகரத்தினம் என்பவரிடம் கர்ணாடக சங்கீதத்தை பயின்றார். பாடசாலையின் ஊடாக குரும்பசிட்டி ஈழகேசரி பொன்னையா நினைவு விழாவை ஒட்டி நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கத்தினையும் பின்னர் கொழும்பு விவேகானந்தா சபையில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்;டு தங்கப்பதக்கத்தினையும் பரிசாக பெற்றார். இதன் பின்னர் இரட்டையர் குழு, கண்ணன் இசை குழு போன்றவற்றிலே பல பாடல்களை பாடி பிரபல்யம் அடைந்தார்.


1970ல் அழவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மிருதங்க வித்துவான் ஐயாத்துரை.சிவபாதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் இணைந்து ‘பார்வதி சிவபாதம்’என்ற பெயரில் இசை குழு ஒன்றை உருவாக்கி இசைக்கச்சேரிகள் பலவற்றை மேடை ஏற்றினர். இச் சந்தர்பத்திலே ‘சிவராதா கிறிஸ்ணமூர்த்தி’ எண்ற இசைக்குழுவிலும் பாடல்களை பாடினார்.
1973ல் இந்தியாவில் இருந்துவந்த பண்ணிசை புலவர் ராஜசேகரன் என்பவரிடம் ஓரளவு பண்ணும் கற்று சில ஆலயங்களில் திருவிழாவின் போது பண்ணிசை கச்சேரியும் செய்துள்ளார்.

இந.தியாவில் இருந்து இலங்கை வந்த ‘பொன்னுச்சாமி இசை குழுவில் சினிமா பின்னணி பாடகி வசந்தா என்பவரோடு இணைந்து பாடல்களை பாடியுள்ளார். புpன்னர் சுசீலாவின் பழைய பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததோடு எல்லோராலும் ‘ஈழத்து சுசீலா’ என அழைக்கப்பட்டார.


இந்தக் காலகட்டதிலே அவரது கணவர் அவருடன் வேறு மகளீர்களையும் இணைத்து அரிச்சந்திரன் மயாணகாண்டம் என்ற நாடகத்தை பழக்கினார். இதில் அரிச்சந்திரனாக நடித்து பல மேடைகளில் மேடை ஏறி புகழ் பெற்றார்.


1977ல் ரகுநாதன் என்பவர் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற படத்தை இயக்கினார். இதில் இரண்டு பாடல்களை பாடினார். ‘ கொஞ்சி கொஞ்சி குயிலிசைக்க’ என்ற பாடலை இணுவில் வீரமணி ஐயர் இயற்ற நாதஸ்வர வித்துவான் என்.கே.பத்மநாதன் அவர்கள் நாதஸ்வரம் வாசிக்க அவருடன் இணைந்து பாடலை பாடினார். ஆத்தோடு ‘என் பிழை பொறுத்தருள்வாய் தேவா’ எண்ற மற்றொரு பாடலையும் பாடினார்.


1978ம் ஆண்டு தொடக்கம் 1979ம் ஆண்டு வரை இலங்கை வானொலி இசை துறையில் பணியாற்றி பல மெல்லிசை பாடல்களை பாடியுள்ளார். இதில் குறிப்பாக சண்முகரத்தினம் இசை அமைக்க இவர் பாடிய ‘மல்லிகை பூத்த பந்தலில’; என்ற பாடல் பிரபல்யம் அடைந்தது. இப்போதும் இலங்கை வானொலியில் ஒலி பரப்பப்படுகின்றது.


1987ல் வயலின் வித்துவான் சந்தானகிருஸ்னர் என்பவர் கிறிஸ்தவ பாடல்களை இசை அமைத்து வெளியிட்டார். இதில் இவரும் பல பாடல்களை பாடியுள்ளார்.


1990ல் அளவெட்டி தவளக்கிரி அம்மன் ஆலயத்தில் இவரது கணவன் காத்தவராயன் நாடகத்தினை மேடை ஏற்றினார். இதில் வில்லுப்பாட்டு சின்னமணி என்பவர் காத்தவராஜனாகவும் இவர் அம்மன் ஆகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


1992ல் அருணா இசைக்குழுவில் இணைந்து பல வருடங்கள் பாடல்களை பாடியுள்ளார். அத்தோடு பார்வதி சிவபாதம் என்ற இசைக்குழுவின் மூலம் பல மேடைகளில் இசை கச்சேரிகளை நிகழ்த்தினார்.


2003ல் நோர்வே, ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கொலண்ட் போண்ற நாடுகளுக்குச் சென்று பல மேடைகளில் பாடி பாராட்டுக்களையும், பெற்றுள்ளார்.


இவரது கலை பயணத்தை பாராட்டி 1998ல் இணுவில் பஞ்சாச்சரம் தமிழ் புலவர் அவர்களால் ‘கான இசைக்குயில் என்ற பட்டமும் 2015ல் ‘கலாபூசனம்’ என்னும் விருதும் தமிழ் குரல் எனும் ஊடகத்தினால்’இசை செம்மல்’ போன்ற பட்டங்களும் மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


இவர் போன்ற ஈழத்து கலைஞர்களை உலகிற்கு வெளிக்கொணர்வது எமது கடமையாகும்.

ஆக்கம்- வினோதன் லுக்சிகா
நுண்கலை துறை மாணவி
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

1 comment

பழம் February 19, 2021 - 12:26 am

……. விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த பின்னர், இவரது குரலில் , விடுதலைப்பாடல்கள் பல ஒலித்தன. கம்பீரமான அவரது குரலில், அவ்விடுதலைக் கீதங்கள் ஒருவித மிடுக்கோடொலித்தன என்றால் மிகையாகாது……..

நன்றி “yarl.com”

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More