
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இன்று காலை மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து முதலில் மாங்குளம் காவல்நிலைய காவல்துறையினரும் அதன் பின்னா் மதிய வேளையில் வவுனியா காவல்நிலைய காவல்துறையினரும் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு ஒட்டிசுட்டான் காவல்நிலையத்துக்கு சமூகமளிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #பொத்துவில் #பொலிகண்டி #பேரணி #செல்வம்அடைக்கலநாதன் #வாக்குமூலம்
Spread the love
Add Comment