இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

சுதந்திரம் பெற்றபின் முதன்முறையாக இந்தியாவில் பெண் ஒருவருக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பாடசாலைஆசிரியரான ஷப்னம் என்பருக்கே இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ள நிலையில் அதற்கு எதிா்ப்புத் தொிவித்தமையினால் கடந்த 2008 ஆம் ஆண்டு அவரது மொத்தக் கொடும்பத்தினையும் கொலை செய்தமைக்காக இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

முன்னதாக இனந்தொியாத சிலா் தமது மொத்தக் குடும்பத்தினையும் கொன்றதாக காவல்துறையினாிடம் ஷப்னம் தொிவித்த போதும் காவல்துறையினாின் விசாரணையில், இந்தக் கொலையினை ஷப்னம் மற்றும் அவரின் காதலன் சலீம் இணைந்து மேற்கொண்டமை தொிய வந்தது.

குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அனைவரும் உறங்கிய பிறகு, சலீமை வரவழைத்து அவரது பெற்றோர் மற்றும் வீட்டிலிருந்த 10 மாதக் குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரையும் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளனா்.

இந்த வழக்கில் 2010 ஜூலை 14 அன்று மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. 2010ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல் முறையீடு செய்த போதும் உயர் நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அவர்களது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் ஷப்னம் தூக்கிலிடும் திகதியினை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே பெண்களைத் தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870ஆம் ஆண்டு பிரித்தானியாின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

ஷப்னத்தை தூக்கிலிடும் திகதி இறுதி செய்யப்படவில்லை எனவும் ஆனால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது எனவும் மதுரா சிறைக்கூட காவல் கண்காணிப்பாளர் ஒருவா் தொிவித்துள்ளாா். #முதன்முறையாக #பெண் #தூக்குத்தண்டனை #ஷப்னம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link