இலங்கை பிரதான செய்திகள்

பொத்துவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம்

அம்பாறை, பொத்துவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் 11.44 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது.

பொத்துவில் – சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன் சதுக்கம், களப்புகட்டு ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் க இடர் முகாமைத்துவ நிலையம் தொிவித்துள்ளது. #அம்பாறை #பொத்துவில் #கடற்கரைப்பகுதி #நிலநடுக்கம் #இடர்முகாமைத்துவநிலையம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.