
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினுடைய முதலாவது இலக்கு தவறிவிட்டதென குறித்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் முதலாவதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவிலேயே தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகை ப்பொருள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் சஹ்ரானுக்கு தொடர்பு உள்ளதென விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சஹ்ரான் #இலக்கு #வனாத்தவில்லு #கண்டி_எசலபெரஹரா
Spread the love
Add Comment