இலங்கை பிரதான செய்திகள்

சஹ்ரானுடன், அறிக்கையையும் குழி தோண்டிப் புதைப்பதை அனுமதிக்க முடியாது!

இந்த அரசாங்கம் விருப்பமின்றியே உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையைப் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு மன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா, அன்றைய நாடாளுமன்ற அமர்வில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடே இதைக் காட்டிக் கொடுத்து விட்டதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25.02.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அறிக்கையின் சில பக்கங்களைக் கிழித்து, சில பரிந்துரைகளைக் குப்பைக் கூடையில் போடவுமே அரசாங்கம் எத்தனித்தது எனத் தெரிவித்த அவர், அந்த அறிக்கையைத் தங்களுக்கும் மக்களுக்கும் வழங்குமாறு பேராயர் உள்ளிட்டோர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தனர், அதனால் எத்தனிப்புகள் நிறை​வேறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறைக்கப்படவிருந்த அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளமைக்கு அவ்வாறானவர்களின் அழுத்தங்கள் காரணமாக இருந்தன” எனவும், பேராயர் மீது சில மறைமுக தாக்குதல்களை, முன்னெடுத்துள்ளதை அவதானிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் பேராயரை அமைதியடையச் செய்து, மீண்டும் அந்த அறிக்கையை மூடிமறைக்க, சில சக்திகள் செயற்படுவதாக தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், எனவே, பேராயர் கூறியதைப் போன்று, இந்த விடயம் சர்வதேசத்துக்குச் சென்றால், இதன் பின்னணியிலுள்ள மூளைசாலி யார் என்பது, கட்டாயம் தெரியவரும் என்ற பயத்தில், அந்தச் சக்திகள் செயற்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, 2019இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலால், அதிக அரசியல் லாபம் யாருக்குக் கிடைத்தது என்பது குறித்து, உரிய விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், சஹ்ரானுடன் இதையும் குழிதோண்டிப் புதைப்பதாயின் அதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என வலியுறுத்தி உள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link