
கொரோனா தொற்று காரணமாக உயிாிழப்போரை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் உயிாிழப்போரின் உடல்கள் தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிற கட்டளைச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
‘222ஆம் அத்தியாயமான தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம்’ எனும் தலைப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்த வர்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, கொரோனாவால் உயிாிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது #அடக்கம் #கொரோனா #அனுமதி #தகனம் #வர்த்தமானி
Spread the love
Add Comment