உலகம் பிரதான செய்திகள்

செவ்வாயின் ‘ஜெஸீரோ’ பள்ளத்தின் துல்லிய படக்காட்சிகள் வெளியாகின !

செவ்வாயில் இறங்கிய நாஸா ஹெலி ஏராளமான செல்ஃபிகளை அனுப்பி வருகின்றது. அங்கு மாலைச் சூரியனின் காட்சி உட்பட செவ்வாயின் மர்மங்கள் நிறைந்த ஜெஸீரோ பள்ளத்தின்(Jezero crater) துல்லியமான(high-definition) அகலப் படங்களை நாஸா விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப் படுகிறது

.புத்திக் கூர்மை புகுத்தப்பட்ட மினி ஹெலி அதன் நுண்ணிய சூம் கமெரா க்கள்(zoomable cameras) மூலமாக 142 தனித் தனி படங்களை உள்ளடக்கிய 360 பாகை ‘பனோரமா'(360-degree panorama) அகலப்படக் காட்சி ஒன்றைப் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜெஸீரோ பள்ளம் (Jezero crater) என்று அழைக்கப்படுகின்ற பகுதி நீண்ட ஆறு அல்லது நீர் நிலை காரணமாக உருவாகிய தரைத் தோற்றம் ஆகும்.சுமார் ஐம்பது மீற்றர் நீளமான கழிமண் படைகள் கொண்ட ஆற்றுப் பள்ளத்தாக்கு போன்ற அமைப்பில் அது தென்படுகிறது. செவ்வாயின் இந்தப் பகுதி முதலில் கண்டறியப்பட்ட போது அதற்கு ‘Jezero’ என்று பெயரிடப்பட்டது.

Jezero என்பது பொஸ்னிய மொழிகளில் நீரேரியைக் குறிக்கிறது. செவ்வாய் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்ற அறிவியலாளர்கள் அந்த நிலப்பகுதி உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டிருக்கலாம் என்று நம்புகின்றனர் பல நூறு கோடி வருடங்களுக்கு முன்னர் (3.5 பில்லியன்) அந்தப் பகுதியில் நீர் நிலை ஒன்று இருந்திருப்பதற்கான சாத்தியங்களை அங்கு இதுவரை எடுக்கப்பட்ட படங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. நாஸாவின் Perseverance ரோவர் விண்கலம் அந்த ஜெஸீரோ பள்ளம் அமைந்திருக்கின்ற பகுதியிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் உள்ள கற்பாறைகளையும் தரைப்பகுதி களையும் துளையிட்டு மண் மாதிரிகளைச் சேகரித்துப் பேணும் பணியை நாஸா விண்கலம் அங்கு மேற்கொள்ளவுள்ளது. பங்கஸ், பக்ரீரியாக்கள் போன்ற ஏதேனும் நுண் உயிரிகளது உயிர்த் தடயங்களைத் தேடிப்பிடிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

படங்கள் :1ஜெஸீரோ பள்ளத்தாக்கு. 2 செவ்வாயில் மாலைநேர சூரியன். ( NASA ருவீற்றர்.) #செவ்வாயின் #ஜெஸீரோ #படக்காட்சிகள் #நாஸா #NASA

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.25-02-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link