Home சினிமா நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி

நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி

by admin

நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்தில் அல்ல என ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமாக பேசியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என நடிப்பில் கவனம் செலுத்தி வருவதுடன் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் ஷங்கர் பெயரில் தன்னை ஒருவர் ஏமாற்றியது குறித்து உணர்வுப் பூர்வமாகப் பேசியுள்ளாா்.

ஒருநாள் இயக்குனர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு வரச் சொன்னதாகவும் தான் அங்கே சென்று அழைத்த போது அந்த அலைபேசி எண் ஸ்விட்ச் ஓப் செய்யப்பட்டு இருந்தது எனவும் தொிவித்துள்ளபுகழ் இதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் , நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல எனத் தெரிவித்துள்ளாா். #குக்வித்கோமாளி #புகழ் #வலிமை #ஷங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More