
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) பல்வேறு பகுதிகளில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதுடன் கொரோனா பரவல் உள்ள இடங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் புகையிரதத்தில் மோதுண்டு மரணித்த மீன் சந்தையில் பணிபுரியும் நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மன்னார் நககரில் அமைந்துள்ள மீன் சந்தை தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #மன்னார் #மீன்_சந்தை #பூட்டு #கொரோனா
Spread the love
Add Comment