Home உலகம் நெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி!தீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம்

நெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி!தீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம்

by admin

நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 150 ஆசனங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு சுமார் 37 கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் வாக்குகள் சிதறுண்டுள்ளன.

பிரதமர் மார்க் ருட்டேயின் (Mark Rutte) லிபரல் கட்சி (VVD) 36 ஆசனங்களை வென்று முன்ன ணியில் உள்ளது.மார்க் ருட்டேயின் கொள்கைகளை எதிர்த்துவருகின்ற அவரது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஜனநாயகக் கட்சி (Democrats 66)24 இடங்களில் வென்று குறிப்பிடத்தக்க முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது.

குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட தீவிர வலது சாரிக் கட்சி (far-right PVV) 17 ஆசனங்களை வென்று மூன்றாம் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் நடைபெறுகின்ற இத் தேர்தலில்எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக தீவிர வலதுசாரிக்கட்சி பின்தள்ளப்பட்டுள்ளது.

பிரதான இடதுசாரிக் கட்சியும் தோல்வி அடைந்துள்ளது. மார்க் ருட்டேயின் அரசாங்கம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொரோனா வைரஸ் முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்திகள் தேர்தலில் தீவீர வலதுசாரிகளுக்கு வாய்ப்பாக மாறும் என்ற கணிப்புகள் தவறி உள்ளன.

சுமார் பத்து ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து வருபவர் பிரதமர் மார்க் றுட்டே. தற்போதைய பெறுபேறுகள் அவரது கூட்டணி நான்காவது தவணைக் காலத்துக்கும் ஆட்சியில் நீடிப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது.வைரஸ் நெருக்கடியைக் கையாண்ட அரசாங்கத்தின் மீதான மக்களது கருத்துக்கணிப்பாக பார்க்கப்படும் இத்தேர்தலில் பிரதமர் ருட்டின் கூட்டணிக்கு – அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும்- நெதர்லாந்து மக்கள் மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளனர்.

குழந்தைகள் நல நிதிய உதவிப் பணம் பெற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்தப் பணம் மீளப்பெறப்படுவதற்குக் காரணமாக அமைந்த அரசின் முறைகேட்டுக்குப் பொறுப் பேற்று பிரதமர் மார்க் ருட்டின் அரசாங்கம் கடந்த ஜனவரியில் பதவி விலகி இருந்தது தெரிந்ததே.

கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் வாக்களிப்பு மூன்று தினங்கள் நடத்தப் பட்டது. தொற்றுக் காரணமாக நெதர்லாந்தில் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

*முதல் படம் :பிரதமர் மார்க் ருட். *இரண்டாவது படம் : தேர்தலில் மிக முக்கிய வெற்றியை ஈட்டிய Democrats 66 கட்சியின் தலைவி மேசை மீது ஏறிக் குதூகலித்த காட்சி. #நெதர்லாந்து #பொதுத்தேர்தல் #பிரதமர் #வெற்றி #தீவிர_வலதுசாரிகள்

—————————————————————

-குமாரதாஸன். பாரிஸ்18-03-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More