
12 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், பொட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாபிரிக்கா, தன்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு நாளை (23 ) முதல் அடுத்த மாதம் 5-ம் திகதி வரை இவ்வாறு பயணத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது #பயணிகள் #பாகிஸ்தான் #பிரேசில் #கொரோனா #பயணத்தடை #இம்ரான்கான்
Spread the love
Add Comment