இலங்கை உலகம் பிரதான செய்திகள்

ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள்
தொடர்பான கொள்கைகளில் மாற்றங் கள் வருமா? இவ்வாறான கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன.


சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்களைத் தாயகத்துக் குத் திருப்பி அனுப்புவது நிறுத்தப்பட
மாட்டாது எனத் தகவல் வெளியாகி உள் ளது. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப் புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவ டிக்கை தொடரும். தொற்று நோய் காரண மாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.


“சுவிஸ்இன்போ” செய்தி ஊடகம் இத்தக வலை வெளியிட்டடு இருக்கிறது. “தற்போதைய நிலைமையின் அடிப்ப டையில் இலங்கையில் பொதுவான ஆபத்து இருப்பதாகக் கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அங்கு முழு இனக் குழுமங்களும் அபாயத்தில் இல்லை.” “எனவே சுவிஸில் ஒழுங்கான வதிவிட அனுமதி இன்றித் தங்கி இருக்கின்ற இலங்கைப் பிரஜைகளைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறைகளில் மாற் றம் இருக்காது.


” ஒவ்வொருவருடைய புகலிட விண்ணப் பங்களும் தனித்தனியே கவனமாக ஆராயப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ்தொற்று நோய் காரணமாக அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக் கைகள் தாமதமாகலாம். ஆனால் பொது வான ஒரு முடிவாக அது நிறுத்தப்பட மாட்டாது.” இவ்வாறு சுவிஸ் கூட்டாட்சி அரசின் குடியேற்ற வாசிகளுக்கான செயலகம் (State Secretariat for Migration – SEM) தெரி வித்துள்ளது- என ‘சுவிஸ் இன்போ’ செய்தி குறிப்பிட்டுள்ளது. ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்களைக் கைது செய்து நாட்டுக்குத் திருப்பி அனுப்புகின்ற முஸ்தீபுகள் இடம் பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே.

குமாரதாஸன். பாரிஸ்.
27-03-2021

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.