இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை யில் மூவர் மீது தாக்குதல்!

கிளிநொச்சி ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொங்கல் பொருட்கள் வாங்கச் சென்ற பாடசாலை மாணவன் உட்பட மூவர் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் அறுத்து சென்றுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த மாணவன்உட்பட இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி. ஏ- 35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற பாடசாலை மாணவனும் அவரது சகோதரும் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பிய சமயம் மது போதையில் இருந்தவர்களால் குறித்த மாணவன் மீதும் அவரது சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றும் அறுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது பிள்ளைகள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்பதற்கு சென்ற அவர்களது தாய் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட 2 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.