Home இலங்கை US House of Representatives இனால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் “இனப்படுகொலை தீர்மானம்” கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு?

US House of Representatives இனால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் “இனப்படுகொலை தீர்மானம்” கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு?

by admin

ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியடைந்ததும் வருத்தமளிப்பதுமான வெளிவிவகாரக்கொள்கை –

By Daya Gamage – colombotelegraph இணையத்தில் எழுதிய கட்டுரையின் சாரம். தமிழில் – globaltamilnews.net


சிறிலங்காவின் தற்போதைய வெளிநாட்டு உறவுகளின் நிலைமையானது மோசமானதாகவும் கண்டுகொள்ளப்படாத ஒன்றாகவும் காணப்படுகிறது.


அமெரிக்காவின் அதிபராக Joe Biden பொறுப்பேற்றதன் பின்பாக, அந்தப் புதிய ஆட்சி மாற்றம் இலங்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தப்போகின்றதென ஒரு நேர்காணலில் வெளிவிவகாரச் செயலாளர் Jayanath Colombage விடம் கேட்டபோது, “ஒரு தாக்கத்தையும் செலுத்தாது. அமெரிக்காவிற்குத் தனது சொந்த நாட்டு விடயங்களை ஒழுங்குசெய்ய வேண்டிய தேவை உண்டு” என பதிலளித்தார்.


இப்படியான இராசதந்திரமற்ற பதில்களால் கோபமுற்ற Biden’s Secretary of State Antony Blinken ZOOM செயலி வழியிலான ஒரு கூட்டத்தில் ஐ.நா. வின் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளுடன் உரையாடும் போது, “ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளிற்காக சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது” என்றார்.


2019 ஆம் டிசம்பரில் Senior US Senator ஒருவருடன் வெளி உறவுகள் குழு (Foreign Relation Committee) ஒன்றின் கலந்துரையாடலில் “ஒரு போர்க்குற்றம் சுமத்தப்படுபவர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகி இருக்கிறாரே..” என்று பேசிய Robert Menendez என்பவர் Democratic Party ஆட்சிக்கு வந்த பின்னர் “Chairman of the Committee” ஆக பதவியுயர்ந்திருக்கிறார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சானது இவருடன் இன்னமும் உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கவில்லை.


Joe Biden இன் வெள்ளைமாளிகைக் கொள்கையை உருவாக்கி, நிர்வகிக்கும் இராசதந்திரிகள் தொடர்பாக ராஜபக்ச அரசாங்கத்திற்கு எந்த அறிவும் இருபதாகத் தெரியவில்லை.
இரண்டு Foreign Relations Committee கள் கொங்கிரசில் உண்டு. அந்த இரு குழுக்களும் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களுடன் எப்போதும் நட்புறவைக் கொண்டிருப்பர். உடன் சேர்ந்து அவர்களே அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை வகுப்பர்.
புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் Senate உறுப்பினர்களோடும் Congress உடனும் தொடர்புகளைப் பேணிக்கொண்டு சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல் (IHL), போர்க்குற்றம், தமிழர்களின் பரிதாபநிலை, மாகாணங்களிற்கான அதிகாரப் பரவலாக்கம், மக்களின் இறப்புகள், வடக்கு- கிழக்கில் பொதுவாக்கெடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகத் தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்த முனைகிறார்கள்.
உடனிகழ்வாக (Coincident) , போர் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, the US House of Representatives 18.05.2021 இல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
இறந்த மக்களிற்கு மரியாதை செலுத்துவதாகவும்,…. நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மீள்கட்டமைப்பு, நீடித்த அமைதியான அரசியல் தீர்வினை ஏற்படுத்தும் வகையிலான மறுசீராக்கம் போன்றவற்றிற்கான ஆதரவை வெளிப்படுத்தி…..அந்த தீர்மானம் அமைந்திருந்தது.


மேலும் “வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட இலங்கையின் வடக்கு- கிழக்கு பிராந்திய மக்களின் அரசியல் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.


இனமுரண்பாட்டிற்கு வழிவகுத்த அடிப்படையான சிக்கல்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வினை நோக்கி வேலை செய்ய வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தத் தீர்மானமானது, … ராஜபக்சவின் இந்த அரசின் வெளிவிவகார அமைச்சானது வோசிங்டனின் கொள்கைவகுப்பாளர்களைச் சரிவர நெருங்கவில்லை என்பதனையே காட்டுகிறது.


இலங்கை அரசிற்கும் பல்வேறு ஆயுதமேந்திய தமிழர் விடுதலை அமைப்புகளுக்கும் இடையிலேயே முரண்பாடு இருந்ததென்றும் அதில் ஒரு அமைப்புத்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு என அமெரிக்காவின் கொள்கைவகுப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்ற விடயமானது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்குத் தெரியுமா?


தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான வடக்கு- கிழக்குப் பிராந்தியத்தில் இராணுவமயமாக்கம் தொடர்கிறது என்றும் இங்கு சிறிலங்கா இராணுவம்: பொதுமக்கள் = 1:2 எனும் விகிதத்தில் இருக்கிறமையையும் இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.


Covid- 19 இனை சிறிலங்கா அரசாங்கமானது கையாளும் முறையே அதன் இராணுவமயமாக்கலின் இன்னொரு பகுதியென Washington நம்புகிறது. தமிழ், முஸ்லிம் மக்களிற்கெதிரான பாகுபாடு தொடர்வதாகவும் அது நம்புகிறது.


மேலும் கீழ்வரும் விடயங்களும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• போர்க்குற்றவாளிகள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.


• குற்றம் நிரூபிக்கப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

• திருத்தப்பட்ட சட்டங்களை இல்லாதாக்கி மீண்டும் சனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது.


• போர்க்குற்றவாளிகளை விசாரித்துத் தண்டனை வழங்க இந்த அரசாங்கம் தடையாக இருக்கிறது.


• கடத்தல்கள், துன்புறுத்தல்களிற்கு இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.


• சர்வதேச நியமங்களை மீறுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக பலமுறை வாக்குக்கொடுத்தும் அதனை இன்னமும் இந்த அரசாங்கம் நீக்குவதாயில்லை.


இந்தத் தீர்மானமானது அமெரிக்காவினை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா பாதுகாப்புச்சபை, ஐ.நா மனித உரிமைகள் சபை என்பனவற்றுடன் இணைந்து வேலைசெய்து சிறிலங்கா மீது சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வலியுறுத்துகிறது.


Co- chair of the US House ஆக இருக்கும்Dina Titus “சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டில் நடந்துகொள்ளும் முறை பற்றி அதிருப்தி வெளியிட்டிருந்தார். கொங்கிரசிலுள்ள Dr.Titus என்பவர் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கையருடன் மிக நெருங்கிய தொடர்புடையவர்.


Sanjey Sedera is a leading Democratic Party Official Activist from the State of Nevada. இவர் “இந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமெரிக்க ஆட்சிமுறை தொடர்பான அறிவுள்ள இராசதந்திரிகள் இன்னும் அணுகப்படவில்லை/ உள்வாங்கப்படவில்லை” என்றார்.


Canadian Ontario Province இல் May 6 அன்று சட்டமன்றத்தில் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நடந்தது இனப்படுகொலை என ஏற்றிருக்கிறது. கனடாவின் வசிக்கும் Dr.Nevillie Hewage இணையவழிக் கலந்துரையாடல்களை ஒழுங்குசெய்து “நடந்தது இனப்படுகொலை அல்ல. பிரிவினைப்போர்” என கருத்துகளை எடுத்துச் செல்கிறார். இது வெளிவிவகார அமைச்சு செய்திருக்க வேண்டிய வேலை. அதனை ஒரு தனி மனிதனாக அவர் செய்கிறார்.
US House of Representatives இனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது இல் “இனப்படுகொலை தீர்மானம்” கொண்டுவருவதற்கான முன்னேற்பாடு.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More