இலங்கை பிரதான செய்திகள்

மதுரை வழியாக கனடாவுக்கு செல்ல முயன்ற 23 இலங்கையா்கள் கைது

மதுரை வழியாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் மதுரை வழியாக அவா்கள் கனடாவுக்கு செல்ல முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலா் மதுரைக்கு வந்தால் அங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக உத்தரவாதம் வழங்கியுள்ளநிலையில் இலங்கையைச் சேர்ந்த 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை சென்றுள்ளனர்.

அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு தொழிலாளர்கள் போர்வையில் கனடாவுக்கு தப்பிக்க, முயற்சிப்பதாக குறித்து மதுரை மாவட்ட கியூ பிாிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேறையதினம் 23 பேரும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவர்களுக்கு மதுரை அரச மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மதுரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக கியூ பிாிவு காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.