இலங்கை பிரதான செய்திகள்

வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.  புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்றைய தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.


அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.அவர் உயிரிழந்து விட்டார்  என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.  பிரேத பரிசோதனைக்காக்க  சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.