Home இலங்கை வயலில் சடலமாக ஒருவர் மீட்பு

வயலில் சடலமாக ஒருவர் மீட்பு

by admin

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்  பகுதியில் உள்ள  வயல்வெளி பகுதியில் இருந்து நேற்று திங்கட்கிழமை(21) மாலை விழுந்து கிடந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 சடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் மீட்கப்பட்டுள்ளதுடன்  இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான    உபாலி என அறியப்படும் ஜாபீர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

சடலமாக மீட்கப்பட்டவர் போதைப்பொருள் பாவனை பழக்கம் உள்ள இவர் கடந்த காலங்களிலும் இவ்வாறு போதைப்பொருள் மூலம் நிதானமிழந்து வீதிகளில் விழுந்து கிடந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினா்ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More