Home இலங்கை இலங்கையில் மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதம்!

இலங்கையில் மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதம்!

by admin


மரண தண்டனை விதிக்கப்பட்டு மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை கைதிகள் 76 பேரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

“நேற்று முதல் பகல் போசனத்தை எடுத்துக்கொள்ளாது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்”என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தங்களுக்கான தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றுமாறு மரண தண்டனை கைதிகள் கோரியுள்ளனர்.

இந்நிலையில் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் சிறைச்சாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More