
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தம்மை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக 16 நாட்களாக சாத்வீகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான நபர் , திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து, உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன
Spread the love
Add Comment