உலகம் பிரதான செய்திகள்

ஜோர்ஜ் பிளாய்ட் கொலை – காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் (George Floyd) என்னும் 46 வயதான கறுப்பு இனத்தவாின் கொலை தொடா்பாக கைது செய்யப்பட்ட , 45 வயதான டெரெக் சாவின் எனும் முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டெரெக் சாவின் மீது கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவா் வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் பிளாய்ட்டின் கழுத்தின் மீது, 45 வயதான டெரெக் சாவின் என்ற வெள்ளை இன காவல்துறை அதிகாரி முட்டியை மடக்கி அழுத்தி 9 நிமிடங்கள் மூச்சு விடாமல் செய்ததில் உயிரிழந்தார்.

ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன் இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்களும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.