
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த ஜேக்கப் சூமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு ஒரு தடவை மாத்திரம் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி அடுத்தடுத்த தவணைகளில் முன்னிலையாகவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment