
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று (30) வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20 ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது . இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .
முன்னதாக, அரச சேவையில் அனைத்து தரங்களின் வைத்திய அதிகாரிகளுக்குமான கட்டாய ஓய்வு வயது 60 ஆக காணப்பட்ட நிலையில், இது கடந்த ஆண்டு 61 ஆக நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment