உலகம் பிரதான செய்திகள்

பிலிப்பைன்ஸ் விமானவிபத்து – உயிாிழப்பு 45 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற ராணுவ சரக்கு விமானம் கீழே விழுந்து நொருங்கி ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிாிழப்பு 45 ஆக அதிகாித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 49 போ் காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

85 பேருடன் கீழே விழுந்து நொருங்கி தீப்பிடித்த விமானம்

July 4, 2021 8:24 am

பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற ராணுவ சரக்கு விமானம் 85 பேருடன் கீழே விழுந்து நொருங்கி தீப்பிடித்துள்ளது. விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரையிறங்கிய போது இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

விபத்துக்கான என்ன காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் . மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. மேலும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இராணுவ சரக்கு விமானத்தில் இருந்து இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தலைமை ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தியுள்ளாா்.

எனினும் இந்த விபத்தில் எத்தனை போ் . உயிாிழந்துள்ளாா்கள் என்ற விவரம் வெளிவராத நிலையில் விமானம் விழுந்த உடன் தீபற்றி எரிந்தால் பலர் இறந்திருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.