Home உலகம் கனடாவில் கடும் வெப்பத்துக்கு 719 பேர் பலி

கனடாவில் கடும் வெப்பத்துக்கு 719 பேர் பலி

by admin

கனடாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 719 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர். கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.

அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானதனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும், கடும் வெப்பம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள துடன் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெப்பத்தின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் மட்டும் 719 பேர் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

மேலும்,கடும் வெப்பம் காரணமாக லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் அந்தக் கிராமத்தில் பெரும் பொருள் சேதங்களை ஏற்பட்டு வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More