இலங்கை பிரதான செய்திகள்

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு -பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்ட புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வணக்கத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் திருமண நிகழ்வுகளை திருமண மண்டபத்தில் 25 சதவீதமான எண்ணிக்கையிலானோருடன் அல்லது அதிகபட்சமாக 150 பேருடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டங்களை 50 பேருடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று இல்லாத திடீர் மரணச்சடங்கு நிகழ்வுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 24 மணித்தியாலங்களுக்கு சடலத்தை அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சினிமா, அருங்காட்சியகம் போன்ற 50 வீதமான இட ஒதுக்கீடுடன் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன், அனைத்து ஹோட்டல்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.