
வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியை சேரந்த 64 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை(10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரு வேறு வகையிலான இராணுவ உடைகள் இடங்கிய பொருட்கள் உட்பட 2 தோட்டாக்கள் உட்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பரல் மீட்கப்பட்ட பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் சவளக்கடை காவல்துறையினர் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
Add Comment