Home உலகம் பெல்ஜியத்தில் இறந்த பெண்ணின்உடலில் இரு வேறு வைரஸ் திரிபுகள்

பெல்ஜியத்தில் இறந்த பெண்ணின்உடலில் இரு வேறு வைரஸ் திரிபுகள்

by admin

பெல்ஜியம் நாட்டின் தொற்று நோயியலாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வைரஸ் கிருமிகளது தொற்றுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் ஒருவரைஅடையாளம் கண்டுள்ளனர். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு ஐந்து நாட்களில் உயிரிழந்த 90 வயதான பெண் ஒருவரது உடலிலேயே இங்கிலாந்தில் அறியப்பட்ட “அல்பா” (Alpha), தென்னாபிரிக்காவில் தோன்றிய”பேற்றா” (Beta) ஆகிய இரண்டு திரிபுகளும் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

மிக அரிதான இத்தகைய இரட்டைத் தொற்றின்(double variant infection) ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.பராமரிப்பாளர்களது உதவியுடன் தனித்து வாழ்ந்து வந்த அப்பெண் தடுப்பூசி எதனையும் ஏற்றியிருக்கவில்லை.

அவர் எங்கிருந்து எவ்வாறு இரண்டு திரிபுகளினதும் தொற்றுக்கு இலக்கானார் என்பது தெரியவர வில்லை. ஒருவர் இரண்டு வகை வைரஸ் கிரிமிகளால் பீடிக்கப்படுவது அதிசயம்அல்ல என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதனைக் கண்டறியும் பரிசோதனை வசதிகள் குறைவாக இருக்கின்றன.

கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த இரு வேறு கிரிமிகளால் பீடிக்கப்படுவது உடலில் மிக வேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழி வகுக்குமா என்பதையும்-புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இரட்டைத் தொற்று நோயாளி ஒருவரைப்பாதுகாக்கும் வல்லமை கொண்டவையா என்பதையும் -உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆய்வுகள் அவசியமாகின்றன என்று பெல்ஜியம் நாட்டின் மருத்துவர்கள் தெரிவித் திருக்கின்றனர்.

இவ்வாறு இரட்டைத் திரிபுகளது தொற்றுக்கள் இதற்கு முன்னர் பிறேசில் நாட்டில் கண்டறியப்பட்டிருந்த போதிலும் அந்த ஆய்வு விவரங்கள் மருத்துவ அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப் பட்டிருக்கவில்லை. பெல்ஜியத்தின் ஓ. எல். வி. மருத்துவ மனையில் (OLV Hospital) கடந்த மார்ச்சில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் இரட்டைத் தொற்று ஆய்வு முடிவுகள் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்களின் ஐரோப்பிய காங்கிரஸிடம் (European Congress of Clinical Microbiology & Infectious Diseases)சமர்ப்பிக்கப்படவுள்ளன.

———————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.11-07-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More