
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முன்னேறும் நிலையில் நடவடிக்கை இந்தியா முக்கிய நகர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கந்தஹாருக்கு அருகிலேயே அவர்கள் வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் பலரை இந்தியா வெளியேற்றி உள்ளது.
ஆனால், தூதரகம் மூடப்பட்டுவிட்டதாக கூறப்படும் செய்தி தவறு என்றும், தூதரகத்தில் அவசர நிலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலை இருப்பதாகவும், தமக்கு கிடைத்த தகவல்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Spread the love
Add Comment