
வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என வடமாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார். அத்தோடு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் ஜெகத் பளிகக்கார, வடமாகாணத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் உள்ள மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபரின் அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இந்ந கடமை பொறுப்பேற்கு நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த போதே வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஜெகத் பளிகக்கார இவ்வாறு தெரிவித்தார்.
“நான் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள இந்த வேளையில் கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியாக அமைந்துள்ளது.அதனால் மக்களின் தேவைகளை அறிந்து உரிந்த சேவையை வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வடக்கு மாகாணம் எனக்கு புதிது இல்லை. காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் பிராந்தியங்களில் காவல்துறை அத்தியட்சகராகவும் மன்னார் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராகவும் முன்னர் கடமையாற்றியுள்ளேன்.
அதனால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிந்த நான் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்” என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிகாவல்துறை மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.




Add Comment