இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும்  கிருமி நீக்கும் இயந்திரங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மாலை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் வைபவ ரீதியாக  கையளிக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின்  கோரிக்கைக்கு அமைவாக  குறித்த நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் இன்று மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர் அவர்களிடம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர்   யாட்சன் பிகிராடோ  கையளித்தார்.


இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர்  ஜேசு ரெஜினோல்ட் , முல்லைத்தீவு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.கேகிதா வைத்திய அதிகாரிகளான வைத்தியர் திரு.சோபன் வைத்தியர் திரு.விதுரன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.