இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

வேண்டும்எங்கள்உலகம்! சி.ஜெயசங்கர்.

பட்டமா பருந்தா பறப்பது வானிலே

பட்டமா பருந்தா பறப்பது வானிலே

பட்டம்போல் மிதக்குதே  பருந்துமே காற்றிலே

ஆடுதே அசையுதே அலைபோல நெளியுதே

பட்டமா பருந்தா பறப்பது வானிலே

வெட்டித் திரும்புதே வேகமாய் வளையுதே

விண்ணிலே நடனம் களைகட்டிப் போகுதே

விளையாட்டு வேடிக்கை வானிலா மண்ணிலா?

பட்டமா பருந்தா பறப்பது வானிலே

நீலவானத்தில் அசைகின்ற முகில்களே முகில்களே

அண்டப்பெருந் தலையணைதான் பிரிந்து

பறக்கின்ற வெண்பஞ்சுக் குஞ்சுகாள் குஞ்சுகாள்

நீங்களும் பாருங்கள் பார்த்ததைக் கூறுங்கள்

பட்டமா பருந்தா பறப்பது வானிலே

வேண்டும்எங்கள்உலகம்.

உலகமெல்லாம்கொள்ளைஅழகு
குவிந்துகிடக்கிது
உள்ளம்உவகைகொள்ளும்வனப்பு
மிகுந்துகிடக்கிது
அள்ளஅள்ளக்குறையாத
வளங்கள்இருக்கிது
அனைத்துயிரும்வாழ்ந்துமகிழ
வழிகள்இருக்கிது
அதைநடத்திமுடிக்கும்அறிவுஆற்றல்
நிறைந்துகிடக்கிது
ஆனால்அதற்குத்தடைகள்எங்கெங்கும்
மலிந்துகிடக்கிது

நிலைமைவிளங்கும்அறிவுஎங்கும்
ஒளிகொள்ளவேண்டும்
உண்மைமறைக்கும்திரைகள்எல்லாம்
விலகிடவேண்டும்
உயிர்வுதாழ்வுஅற்றஉலகம்
இருந்திடவேண்டும்
உலகஉயிர்கள்எல்லாம்நல்லாய்
வாழ்ந்திடவேண்டும்

சி.ஜெயசங்கர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.