Home இந்தியா இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

by admin

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.

அதன்போது, “தலைநிமிரும் தமிழகம்” என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

அவ்வாறே முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More