
நான் சிங்களவராக இருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் எந்தவொரு இடையூறும் இருக்காது என நம்புகிறேன் என வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துசேனா தெரிவித்துள்ளார்.
வடமாகாண பிரதம செயலாளராக இன்றைய தினம் கடமையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றி இருந்தேன். தமிழ் , சிங்களவர்கள் உட்பட பல மதங்களை சார்ந்தவர்களும் வவுனியாவில் வசித்தனர். அவர்களுடன் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியுள்ளேன்.
மக்களுக்காக கடமையாற்றும் போது , மொழி , இனம் என்பன தடையாகவோ பிரச்சனையாகவோ இருக்கப்போவதில்லை என நம்புகிறேன் என தெரிவித்தார்.
Spread the love
Add Comment