இலங்கை பிரதான செய்திகள்

ஜப்பானின் நிலைமையிலிருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைமையில்

ஜப்பானின் நிலைமையிலிருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு சென்று விட்டதாக முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

  மேலும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒரே கொள்கையோடு செயற்படுவதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் மக்களுக்கு விரைவாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டணி ஒன்று அமைப்பதால் மாத்திரம் வெற்றிபெற்றுவிட முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவா் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா என்றே மக்கள் பார்ப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா வைரஸ் தொற்றாலும், கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த கப்பலாலும் நாட்டுக்கு பாரியப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள போதிய அந்நிய செலாவணி இல்லை எனவும் இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.