சினிமா பிரதான செய்திகள்

வேணு அரவிந்த் கோமாவில் இல்லை

நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை எனவும் நலமாக இருப்பதாகவும் ராதிகா சரத்குமாா் தெரிவித்துள்ளார். கோவை அனுராதா இயக்கிய கோஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், கே.பாலசந்தர் இயக்கிய காதல் பகடை ,காசளவு நேசம் ,அலைகள் உள்ளிட்ட தொடா்களில் நடித்த வேணு அரவிந்த் அதனைத் தொடர்ந்து ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த செல்வி தொடாிலும் நடத்திருந்தாா்

அதில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதனைத் தொடர்ந்து வாணி ராணி, அக்னி சாட்சி ,சந்திரகுமாரி’ உள்ளிட்ட தொடா்களிலும் நடித்திருந்ததுடன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுத் தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு இரண்டிலிருந்து மீண்டுவிட்டதாகவும், சமீபத்தில் மூளையில் நடந்த அறுவை சிகிச்சையால் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

வாணி ராணி தொடரில் வேணு அரவிந்துடன் நடித்த இளம் நடிகர் அருண் குமார் ராஜன் இந்தச் செய்திக்கு நேற்று மறுப்பு தெரிவித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராதிகாவும் தனது ருவிட்டர் பக்கத்தில் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. அவரது உடல்நலம் குறித்து அவரது மனைவியுடன் பேசி வருகிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் ஆரோக்கியமாக மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்போம். தவறான செய்திகளை நிறுத்துங்கள் என ராதிகா தொிவித்துள்ளாா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.