இலங்கை பிரதான செய்திகள்

முழுமையான முடக்கம் இல்லை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு :

தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எனினும்  சில கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனத் தொிவித்துள்ளாா்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் பின்னா் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொிவித்துள்ள அவா் அந்தவகையில் 500 அல்லது 500ற்கு மேற்பட்டோா் அமரும் திருமண மண்டபமொன்றில் 150 பேரையும் 500ற்கு குறைவானோர் அமரும் திருமண மண்டபங்களில் 100 பேரையும் மாத்திரம் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இறுதிச் சடங்குகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

 அரச ஊழியர்கள் அனைவரையும்  அழைக்கும் சுற்றறிக்கையை மாற்றியமைத்து, கடமைக்கு அழைக்கவேண்டிய நபர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதெனத் தொிவித்துள்ள அவா்   செப்டம்பர் 1ம் திகதிவரை அனைத்து அரச விழாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.